..குருதிக்கூடு..

..என்னவளுக்காக..

Thursday 18 August 2011

இதுவே எனது முதல் பதிவு...

                 A LOVE TALE


ஒரு பெறிய குயிலோசையின் இடையே இரயிலின் வேகம் குறைய ஆரம்பித்தது.
இதுவரை முகத்தில் அரைந்த காற்று இப்பொழுது முடியை கோதிவிட... கிரீச் நின்ற ரயிலின் மடியிலிருந்து
இறங்கி பெயர் பலகையை தேடினேன். ஏதோ  புரியாத மொழியில் இருந்தது.
  ஆள் அரவம் இல்லாத அந்த ரயில் நிலையத்தில் வாழ்க்கையை வெறுத்த நாய் ஒன்று வரவேற்றது.

இயற்கையின் குளிர்ச்சி எலும்புகளை தீண்டியதும்.. அந்த கும் இருட்டில் தைரியம்மிக்க ஜான்சிராணி ஒருத்தி கையில் வாட்டர் பாட்டில் வைத்துகொண்டு இறங்கினால்.. காந்தவிழி அவளுக்கு.. அவ் விழியை கண்டதும் ஏனோ எனக்கும் தாகம். வாயேன்...! நாம் நம் கை கோர்த்து வாட்டர் டேங் தேடலாம் என்றேன்.
அவள் முகத்தில் பல அர்த்தம்.. பழைய கறுப்பு வெள்ளை சினிமா படம்  போன்று அவள் கண்கள்... அதோ கண்டோம்  ஆயுள் கைதியாக இரும்பு கூண்டில் வாட்டர் டேங்.. அருகில் சென்றதும் பாசம் கொண்ட பாசி அவள் பாதம் பற்றியிழுக்க வசதியாய் அவள் தனம் ஏந்தி பிடித்துக் கொண்டேன்.
          " தம்தன தம்தன தாளம் வரும் ஒரு மோகம் வரும் "
 -பாடல் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரயில் கிழக்கே பாய்ந்து சென்றது.. ஆளில்லாத
ரயில் நிலையத்தில் அவளும் நானும் மட்டும் தனியாக.. ஆகா.. இன்பம்.. தலையில் கை வைத்து அவள் தவிக்கையில் பேரிண்பம்.. அழுக்கு பெஞ்சில் அவளை அமர்த்தி ஆறுதல் படுத்த மணி ஆறு ஆயிற்று. அவளின் ஏறி இறங்கிய பார்வை மணி ஏழு என்றதும் ஏனோ எனக்குள் குழப்பம் அவள் பயம் கொல்கிறாளோ..
விழி பார்த்து சொன்னேன்.. பயப்படாதே பெண்ணே.. குழந்தை முகம் கொண்ட பெண்களை எங்கள் சங்கத்தார் எதுவும் செய்வதிலை என்றேன்... அவளோ : பின் ஏன் இப்படி உத்து உத்து பார்கிறாய்.. நானோ உன்னை சைட் அடிக்கறேன் என்றதும் அவள் ஏதோ எத்தனிக்கையில்.., அவளின் இதழோரம் முதழ் மழைத்துளி விழுந்தது அதைப்பற்றி எடுக்க என் உளர்துணி நீட்டும்பொழுது பொறாமையில் அழ ஆரம்பித்து விட்டாள் வான்மகள்.  வான் உடைத்த மழையில் அவளது கார்முகில் கூந்தல் ஈரமுகில் ஆனது.
" பைத்தியம் ஆக்கும் பேரழகு ஏன் பெண்களுக்கு மட்டும் சாத்தியம் ஆகிறது".
   மழை ஓயவும் அவள் சால்வைக்கு சளி பிடிக்கும் வரை துடைத்து தீர்த்துவிட்டாள். இறுதிவரை என்னை கண்டுகொள்ளவே இல்லை.
    மற்றுமொரு குயில் கூவ.. ஒரு ரயில் வர...
மலங்க மலங்க விழித்தவனை மதிகாமல் ரயில் ஏறி சென்றுவிட்டாள்..

போடி போ உன்னை அறியாமல் உன் ஈர முகில் திருடிய மழை நீரில் என் தாகம் தனித்துக்கொண்டேன்.
என்னை மறந்துவிடாதே மற்றுமொறு மழைகாலத்தில் உனக்காக காத்திருப்பேன்.. மறவாமல் மழைநீர்
கொண்டு வா என் ஈர முகிலே....

0 comments:

Post a Comment

My

pitichiruku