..குருதிக்கூடு..

..என்னவளுக்காக..

Wednesday 24 August 2011

ஏனோ கிறுக்குகிறேன்...

                                              என் காதல்

என் பெயர் சபரி. நான் அழகான வாழ்கையின் முழு அர்தத்தையும் தேடி திரிந்து கொண்டிருந்தேன்.
மழையில் நனைந்து வீடு வந்தால் மழையை திட்டும் என் தாயின் பாசத்தில்.. தேனீக்கள் கூட்டம் போல நண்பர்களுடன் சுற்றித்திரிந்த நாட்களில்.. சிநேகிதனின் மரணத்தில்.. பசியின் ஏக்கத்தில்.. வாழ்க்கையின்
பாதி அர்த்தம் அறிந்தேன். காதல் பள்ளிகொள்ள ஆசை.. ஏனோ அது மட்டும் தாமதமாக....
தோழி ஒருத்தி மூலம் தொலைபேசியிள் அவள் அறிமுகம் கிடைத்தது (09-02-2011). அன்று என் பேச்சில்
விட்ட இரு கணைகள் எங்கேயோ போய் விழுந்து விட்டதென்று எண்ணினேன்..  ஆனால் இதோ (16-02-2011
அன்று அவளை சந்திதேன்) அவளது புருவத்தின் கீழே போய் நின்று கொண்டு என்னையே திருப்பித் தாக்குகிறது.  காந்தவிழி கொண்டு அவள் பார்க்கையில் மனதிலே பெரிய போர் நடைபெறுகிறது ஆம் ஆனால் அது சேரன் செங்குட்டுவனின் வடதிசை போர் போல சீக்கிரம் முடிந்தது. அதிலே என் ஆண்மை தோற்றது- அவள் பெண்மை வென்றது. அவள் வீசிய "வெறும் பார்வை-அதிலே என் உள்ளம் கொள்ளை"-இதிலேயே
காதலில் எவ்வளவு பகுதி பூர்த்தியாகிறது என்பதை உணர்ந்தேன். ஆஹா வாழ்கையின் முழு அர்த்தமும் புரிகிறது..! வாய் திறக்க முயல்கிறேன் முடியவில்லை-பசைபோட்டு ஒட்டியது போலாகிறது. போகட்டும்
கண் பேச்சிலே காதல் வளர்ப்போமே..!
    அவள் வீசிய புன்னகையும்-உலக இன்பத்தின் சாரத்தை இரு சிறு பிரிவுகளாக்கிச் செவ்வர்ண்ம் பூசியதுபோல்
தன் இதழ்கொண்டு அவள் சிந்திய வெட்கச் சிரிப்பும் இருதலை நாகமாக தாக்குகிறது. நேரம் செல்ல செல்ல புன்னகை நிலவு என்னை ஆண்டு கொள்கிறது.. இருவராக இருக்கும் பொழுது எவ்வளவு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டோம். ஆம் அவள் பெயர் கீர்த்திகா. பெயரின் முதல் எழுத்து மட்டும் கீ அல்ல, என் இதயத்தின் கீ-யும் அவளிடம் தான்..

காதலின் பாரம் அதிகமாக என் காதலை சொல்லத் துடிக்கும் தருணம்.. இதோ
புதையலாக.. புதுமலராக.. அவள் பூத்த நாளில் (பிறந்த நாள்) முதல் முத்தம் பதித்து என் காதலை சொன்னேன்.
அன்று இரவு, அவள் பக்கத்திலே வருவது போலவும்.. நெற்றியைத் தொட்டு முத்தமிடுவது போலவும்.. அவளது செம்பவள இதழ் கொண்டு தன்னை முத்தமிட்டு  முத்தமிட்டு  தன்னை கரைத்து விடுவது போலவும் எண்ணி எண்ணிப் புரண்டு படுக்களானேன்.
இரவு தூங்கவைக்கும் அவள் நியாபகமே காலை எழுப்பிவிடுகிறதே..!
    இன்றுவரை அவளை காணாத பகல் - வேளையில்லாதவனின் பகல் போலவும்... இரவு - ஒரு நோயாளியின் இரவைப் போலவும் இருக்கிறது...

1 comments:

Anbu said...

கலக்கற தம்பி..
தொடர்ந்து எழுதுடா..

Post a Comment

My

pitichiruku