..குருதிக்கூடு..

..என்னவளுக்காக..

Monday 12 September 2011

..பருவம் எய்தாத தாய்..

                             ..பருவம் எய்தாத  தாய்..
      சிறுவாணி மலையின் குளிர்ச்சியை சுமந்துவந்து நரம்புகளிடம் நலம் விசாரிக்க தன்னை தாவியணைத்த தென்றல் காற்றுடன்-இயற்க்கையுடன் செய்த ஒப்பந்தம் முடிந்த சோகத்தில் மரக்கிளையிலிருந்து உதிர்ந்த
மலர்களுக்கிடையே வீட்டின் முற்றம் வந்தாள் நிலா-பெயருக்கு ஏற்றது போல் அவள் முகம் நிலாமுகம். அமாவாசை ஆனால் இவள் வீதியில் மட்டும் வெளிச்சம்-காரணம் இந்நிலா.
      அப்பகுதி இளவட்டங்கள், நான் நிலாவை நேற்று பார்த்தேன்.. நான் இன்று பார்த்தேன் என்று பெருமை பீய்த்து கொள்வார்கள். அவள் இட்ட (பார்வையெனும்) மருந்தால், இருமல் பிடித்த குட்டியிட்ட நாய் போல் குலைவார்கள். ஒரு சிலரோ கனவு கண்டு மகிழ்வதோடு சரி.
      
       வாசல் வந்து கோலம் போட ஏதுவாக அமர்ந்து புள்ளிவைக்க எத்தனிக்கையில் மொபட்டில் வந்தான் கர்வம்மிக்க சூரி என்கிற சூரியன்-வாரணம் ஆயிரம் கொண்டவன். (அவனை பார்க்கவே கோலம் போட வந்தாள்). அவள் உடல் எங்கு நோக்கினும் சூரியன்-சொல்லப்போனால் அவள் நெஞ்சமே சூரியன் உருவம் போல் ஆகிவிட்டது. காமம் வளரா காதல் வளர்த்தார்கள்.. திருமணம் செய்ய எண்ணினார்கள்..சூரியினின் தாய் நிலாவை வரவேற்றாள்.. ஆமாம் முற்றத்தில் வீசும் நிலா வீடெனும் கூட்டில் வீசினால் வேண்டாம் என்பார்களா? நிலாவைப் பெற்றவளோ காதல் படலத்தை கடந்து விட்ட மூதாட்டி. கொக்கைப் போல் நரைத்த கூந்தல்.. தன்க்குத் தான் கையில் இருக்கும் கோல் என்று தெரியாமல் தானாட-கோலாட தடுமாறும் முதிவள். தன் காலம் கடந்து விட்ட காரணமோ என்னவோ மகளை காதலிக்க விடாமல் தடுக்கும் பெருமாட்டி. மகள் நிலாவைப் பார்த்து நீ சூரியனை நீ கண்ணாலும் காணக்கூடாது என்று கட்டளையிடுகிறாள் அந்தக் கிழவி. ஆத்திரம் கொள்கிறாள் நிலா.. அவளது ஆத்திரம் வசையாகாமல் சந்தேகமாக மாற்றம் கொள்கிறது..
        மாலைப்பொழுதில் தன் தோழியை அழைக்கிறாள். அடி தோழியே, சூரியின் மீது நான் காதல் கொள்ளக்கூடாது என்று தன் தாய் தடுக்கிறாளே ஏன்? என்று கேட்கிறாள்-அவளோ விழி பிதுங்கி நிற்கிறாள்.. ஆமாம் அவள் மட்டுமென்ன காதல் கடலிலே நீச்சலடித்து காதலைப் பற்றிய தத்துவங்களை பிழிந்து எடுத்துக்கொண்டு வந்தவளா? பாவம் புதுசு..! காதல் கடலின் முதற்படியைக் கூட மிதிக்காதவள். ஏதோ தனக்கும் ஒரு நாள் காதல் வரும் என்கிற அளவில் மட்டுமே காதலைப்பற்றித் தெரிந்தவள். சேற்றில் எறிந்த   பந்துபோல நிலாவின் கேள்வி இவளிடம் கேள்வியாகவே தங்கிடவும்  நிலாவிற்கு கோபம் வருகிறது. ஒருவேளை இப்படி  இருக்கலாமோ என்று நிலா கூற-தோழி கூர்ந்து கவனிக்கிறாள்.
      அடி தோழியே..! என் தாய் குழந்தையாயிருந்து பருவப்பெண் ஆகாமல், ஒரே பாய்ச்சலில் கிழவியாகியிருப்பாளோ? இளமைப் பருவத்தின் துடிப்புகளை உணராத முதியவளாகவே அவளது வாழ்க்கை தொடங்கியிருக்குமோ? இல்லையென்றால் என் காதலைத் தடுப்பதற்க்கு நியாயம் இல்லையே தோழி..! ஒன்று மட்டும் விளங்குகிறது, என் அன்னை இளையவளாய் மூத்தவள் அல்ல.. முதியவளாகவே பிறந்தவள்-என்கிற முடிவிற்கு வருகிறாள்...

Friday 2 September 2011

..பூலோக தேவதை..



      அருமையான பூங்கா.. ஒரு இளைஞன் வருகிறான்-அங்கே மெல்லிய   இடை கொண்ட பூங்கொடி ஒருத்தி நிற்கிறாள். பயலுக்கு உடம்பு துடிக்கிறது. உள்ளம் தந்தியடிகிறது... யார் இவள்? தேவலோகத்து ஊர்வசியா?    தனம் பற்றி தவிக்க வைக்கும்  ரம்பையோ?   பூமியிலே  இதுபோன்று  ஒரு அழகியா? என்று அதிசயிக்கிறான். சரி அவள் பூலோகமா? தேவலோகமா என்று ஒரு முடிவெடுக்க வேண்டுமல்லவா? ஆதலால் அவள் பாதம் பார்க்கிறான்.. பூமி அவள் பாதத்திற்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆகா..! இவள் பூலோக பிரஜை தான்.. ஏனென்றால் தன் வீட்டுக் கிழவி சொன்ன கதைகளில் தேவலோகக் குமரிகள் வானில் மிதப்பார்கள் - பறப்பார்கள் என்று தான்.. 

இவளின் பாதமோ பூமியில்.. ஆகவே இவள் மானிடப்பிறவி தான் என்ற முடிவிற்கு வருகிறான்.
     அவள் அருகே செல்கிறான்-அவள் அழகில் கண் சிமிட்ட மறக்கிறான்-அன்பே என்கிறான்-சற்றே தடுமாற்றத்தோடு நான் உன்னை காதலிக்கிறேன் என்கிறான்-மெளனம் காக்கிறாள்-நீ சம்மதம் மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன் என்கிறான்-அவளோ நாள் பட்ட நோய் போல் பதில் கூறாமல் போகிறாள்.. அன்று மாலையில் காதல் ஏக்கத்தோடு அலுத்துத் தூங்குகிறான். காதல் விடுமா? கனவிலும் வருகிறாள் அந்த காரிகை.. காதலும் தருகிறாள்.. இனியும் தம்மால் பொருக்க முடியாதென்று எழுந்து அமர்கிறான். பூங்காவில் சந்தித்த அந்த மோகனக்குமாரியின் அழகை எண்ணி எண்ணி புலம்ப ஆரம்பிக்கிறான். இரவில் அவன் புலம்பியதை அம்பாக திரித்து காலையில் அவள் விழியில் செலுத்த எண்ணி படுக்கலானான்.
     மறுநாள் காலை அவளைப் பார்க்கிறான். சாதாரணக் காதலர்கள் பார்க்கும் பொழுது என்ன நடக்கும்? உணர்ச்சிகள் மீதூறும்-உடல் சூடேறும் இதுதானே நடக்கும். ஆனால் இவனுக்கோ மெய்தளர்ந்து விட்டது.
   ஏ பெண்ணே.. நீ எப்படி இருக்கிறாய் தெரியுமா?
.. கட்டாத பூமாலை ..
.. கற்பக பூ மாலையில் வாசம் தரும் வண்டு ..
.. வேந்தர்களிடம் இல்லாத செல்வம் ..
.. மேகம் சேராத மின்னல் ..
.. தெவிட்டாத தேன் ..
.. தாகம் தணிக்கும் தனி மருந்து ..
வட்டமுகக் கட்டழகுப் பெட்டகமே.. வாயேன் இப்பக்கம்.. தாயேன் ஒரு முத்தம்.. ஜோடி காதலர்கள் நாமே.. வா ஆடி மகிழ்வோம் மானே..
     பேராசை என்னும் ஆழ்கடலில் விழுந்துவிட்டேன் உனது தோள் என்னும் கப்பலில் ஏற்றிக் கரை சேர்க்க மாட்டயா? - என்று அவளை அணு அணுவாகப் பிளந்துகட்டுகிறான்- மெளனம் கலைத்தால்.. வெட்க்கத்துடன் தலைகுனிந்து ஏரிக்கொள்ளுங்கள் நாம் யாருமில்லா தனித் தீவில் குடிபுகுவோமென்று...

My

pitichiruku