..குருதிக்கூடு..

..என்னவளுக்காக..

Friday 19 August 2011

காதல்.. காதல்.. காதல்.. (2)

.
                                                       காதல்

      எங்கு நோக்கினும் காதல். எல்லா உலகிலும் காதல்-இலக்கியம் அனைத்திலும் காதல்-நாடகம் முழுவதும் காதல்-திரைபடங்களில் பல ரகமான காதல்-கோயில்களிலே காதல்...! இப்படி ஆதியுமாகி அனாதியுமாகி  எங்கும் பிரகாசமாய் கலந்து நிற்கிறது காதல்..!
       காதல் செய்வீர் தோழா... காதல்.. காதல்.. காதல்.. காதல்.. நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணிடைப் பெண் ஒருத்தி பணியிலே..! காதல் வேண்டிக் கரைகிறேன்..! காதல் அடைதல் உலகியற்கை
- இப்படி பலர் காதல் பற்றி கதறியிருகிறார்கள்.
          இதிலே சிலர், " அவன் பார்த்தான் - அவளும் பார்த்தாள் பட்டுத் தெறித்தன விழிகள். கண்கள் கவ்வி ஒன்றையொன்று உண்டன. அவன் சாடை காட்டினான்-சிரித்தாள் தங்கமே என்றான் - அவள் வெட்கத்தில் தலை குனிந்தாள்..." என்பதோடு காதலை நிறுத்துகிறார்கள்.
          இன்னும் சிலரோ, : அருகில் வந்தான்-அன்பே என்றான்: கட்டிப்பிடிதான்-கனிய முத்தம் கொடுத்தான்....." என்பதோடு போதும் என்று நிற்கிறார்கள்.

ஆனால் ஒரு சிலரே, கட்டிப்பிடித்ததோடு, முத்தம் கொடுத்ததோடு நிற்க அவற்களுக்கு சம்மதம் இல்லை. அது மட்டும் காதலாகிவிடுமா? அல்லது எல்லையைக் காட்டாமல் காதல் முடிந்துவடுமா?
கட்டிப்பிடிதான்-எது மாதிரி கட்டிப்பிடிதான்: பனைமரத்திலே கொடிபயர்ந்த மாதிரியா? இல்லை
சாரையும் சர்ப்பமும் மாதிரியா? - தனபாரம் இரண்டும் மார்பில் குத்திற்று.. இருந்தாலும் அந்த தொந்தரவுக்குள்ளேயும் சுகம் கண்டனராம்... காலமெல்லாம் இரவாக இருக்கக் கூடாதா என்று ஆதங்கப்படுவார்களாம்.

0 comments:

Post a Comment

My

pitichiruku