..பருவம் எய்தாத தாய்..
சிறுவாணி மலையின் குளிர்ச்சியை சுமந்துவந்து நரம்புகளிடம் நலம் விசாரிக்க தன்னை தாவியணைத்த தென்றல் காற்றுடன்-இயற்க்கையுடன் செய்த ஒப்பந்தம் முடிந்த சோகத்தில் மரக்கிளையிலிருந்து உதிர்ந்த
மலர்களுக்கிடையே வீட்டின் முற்றம் வந்தாள் நிலா-பெயருக்கு ஏற்றது போல் அவள் முகம் நிலாமுகம். அமாவாசை ஆனால் இவள் வீதியில் மட்டும் வெளிச்சம்-காரணம் இந்நிலா.
அப்பகுதி இளவட்டங்கள், நான் நிலாவை நேற்று பார்த்தேன்.. நான் இன்று பார்த்தேன் என்று பெருமை பீய்த்து கொள்வார்கள். அவள் இட்ட (பார்வையெனும்) மருந்தால், இருமல் பிடித்த குட்டியிட்ட நாய் போல் குலைவார்கள். ஒரு சிலரோ கனவு கண்டு மகிழ்வதோடு சரி.
வாசல் வந்து கோலம் போட ஏதுவாக அமர்ந்து புள்ளிவைக்க எத்தனிக்கையில் மொபட்டில் வந்தான் கர்வம்மிக்க சூரி என்கிற சூரியன்-வாரணம் ஆயிரம் கொண்டவன். (அவனை பார்க்கவே கோலம் போட வந்தாள்). அவள் உடல் எங்கு நோக்கினும் சூரியன்-சொல்லப்போனால் அவள் நெஞ்சமே சூரியன் உருவம் போல் ஆகிவிட்டது. காமம் வளரா காதல் வளர்த்தார்கள்.. திருமணம் செய்ய எண்ணினார்கள்..சூரியினின் தாய் நிலாவை வரவேற்றாள்.. ஆமாம் முற்றத்தில் வீசும் நிலா வீடெனும் கூட்டில் வீசினால் வேண்டாம் என்பார்களா? நிலாவைப் பெற்றவளோ காதல் படலத்தை கடந்து விட்ட மூதாட்டி. கொக்கைப் போல் நரைத்த கூந்தல்.. தன்க்குத் தான் கையில் இருக்கும் கோல் என்று தெரியாமல் தானாட-கோலாட தடுமாறும் முதிவள். தன் காலம் கடந்து விட்ட காரணமோ என்னவோ மகளை காதலிக்க விடாமல் தடுக்கும் பெருமாட்டி. மகள் நிலாவைப் பார்த்து நீ சூரியனை நீ கண்ணாலும் காணக்கூடாது என்று கட்டளையிடுகிறாள் அந்தக் கிழவி. ஆத்திரம் கொள்கிறாள் நிலா.. அவளது ஆத்திரம் வசையாகாமல் சந்தேகமாக மாற்றம் கொள்கிறது..
மாலைப்பொழுதில் தன் தோழியை அழைக்கிறாள். அடி தோழியே, சூரியின் மீது நான் காதல் கொள்ளக்கூடாது என்று தன் தாய் தடுக்கிறாளே ஏன்? என்று கேட்கிறாள்-அவளோ விழி பிதுங்கி நிற்கிறாள்.. ஆமாம் அவள் மட்டுமென்ன காதல் கடலிலே நீச்சலடித்து காதலைப் பற்றிய தத்துவங்களை பிழிந்து எடுத்துக்கொண்டு வந்தவளா? பாவம் புதுசு..! காதல் கடலின் முதற்படியைக் கூட மிதிக்காதவள். ஏதோ தனக்கும் ஒரு நாள் காதல் வரும் என்கிற அளவில் மட்டுமே காதலைப்பற்றித் தெரிந்தவள். சேற்றில் எறிந்த பந்துபோல நிலாவின் கேள்வி இவளிடம் கேள்வியாகவே தங்கிடவும் நிலாவிற்கு கோபம் வருகிறது. ஒருவேளை இப்படி இருக்கலாமோ என்று நிலா கூற-தோழி கூர்ந்து கவனிக்கிறாள்.
அடி தோழியே..! என் தாய் குழந்தையாயிருந்து பருவப்பெண் ஆகாமல், ஒரே பாய்ச்சலில் கிழவியாகியிருப்பாளோ? இளமைப் பருவத்தின் துடிப்புகளை உணராத முதியவளாகவே அவளது வாழ்க்கை தொடங்கியிருக்குமோ? இல்லையென்றால் என் காதலைத் தடுப்பதற்க்கு நியாயம் இல்லையே தோழி..! ஒன்று மட்டும் விளங்குகிறது, என் அன்னை இளையவளாய் மூத்தவள் அல்ல.. முதியவளாகவே பிறந்தவள்-என்கிற முடிவிற்கு வருகிறாள்...

2 comments:
கதையை முடிக்கவில்லையே நண்பா? ஆனாலும் மிகவும் அருமை. ஒரு சின்ன வேண்டுகோள். உங்கள் வலைதளத்தை திரட்டிகளில் இணைக்கவும். அது இன்னும் உங்களை பிரபலப்படுத்தும். பகிர்வுக்கு நன்றி.
..வருகைக்கு நன்றி பிரசாத்..
கதையின் முடிவு: சூரியனும் நிலாவும் ஒன்று சேரமுடியாதே..!
..ஆலோசனைக்கும் நன்றி..
நான் இணைய உலகிற்கு புதிது நண்பா.. முயற்சி செய்து வருகிறேன்..
Post a Comment