..குருதிக்கூடு..

..என்னவளுக்காக..

Wednesday 24 August 2011

..ரணம்..

                    
                                                        ..காதல் தோல்வி..

இந்த நாட்டில் பலருக்கு காதலிக்கத் தெரிகிறது ஆனால் சிலருக்குத் தான் நிறைவேற்றிக் கொள்ளத் தெரிகிறது.
இங்கே எத்தனையோ காதல்கள் விதைக்கப்பட்ட மறுநாளே புதைக்கப்படிகிறது. பல காதல் பூக்கள் கல்லரையில் விழவே பூக்கின்றன. சில காதல் கனிகள் கனிகின்ற அவசரத்தில் விம்பிவிடுகின்றன. அதற்கு
காதலர்கள் மட்டும் காரணமல்ல.. மண், வெப்பம், காற்று, ஈரம் இந்த நான்கு காரணங்களில் ஒரு காரணம்
குறைந்தாலும் விதை முளைக்காது என்பது மாதிரி.. ஜாதி, மதம், மரபு, பொருளாதரம் இந்த நான்கில் ஒன்று குறைந்தாலும் கூட காதல் கற்பத்திலேயே கறைந்து விடுகிறது. இந்த கடிதம் எழுதுபவன் காதலை ஏற்றுக்கொண்டவன் இறுதியில் காதலியை ஏற்றுக்கொள்ள முடியாதவன்.
     பருவம் காதல் எனும் சிறகு குடுத்தது ஆனால் எதார்த்தம் என் சிறகுகளை கத்திருக்கிறது..
கால்களில் லாடங்களோடு உன்னோடு ஓடிவர முடியாது காதலி என்று கண்ணீர் வாசகம் பேசுகிறான்.
இப்படித்தான் இந்தியாவில் பல காதலர்களுக்கு...
        " உன்னை காதலிக்கிறேன் என்பது தமிழ்த்தாய்வாழ்த்தாகவும்..
          என்னை மறந்துவிடு என்பது தேசியகீதமாகவும் ஒளிக்கிறது.."
இதோ அவனது மனதின் குறியீடு (ஏன் நம்மில் பலரது மனக் குறியீடும் இதுதான்) :
சொன்னவன் நான் தான் - உனக்கும் சேர்த்து சுவாசிக்கிறேன் என்று சொன்னவன் நான் தான்..
சொன்னவன் நான் தான் - உன்னைத் தவிர என் கண்களுக்கு வேறு எதையும் பார்க்கத் தெரியவில்லை என்று சொன்னவன் நான் தான்..
 நம் திருமணத்தில்
கடல் முத்துக்களையும்..
வானம் நட்சத்திரத்தையும் அர்ச்சனை தூவும்
என்று சொன்னவன் நான் தான்..
    ஒருவேளை நாம் பிரிந்தால்...!
மழை மேல் நோக்கிப் பெய்யும்..
காற்றும் இடைமறிக்கும்.. என்று சொன்னவன் நான் தான்..
இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால் இதை சொல்வதும் நான் தான்..
                                       " என்னை மன்னித்து விடு
                                          என்னை மன்னித்து விடு"
நான் காதல் கொண்டது நிஜம்.. கனவு வளர்த்தது நிஜம்.. எனது இரத்தத்தில் இரண்டு அனுக்கள் சந்தித்து கொண்டு உனது பெயரை உச்சரித்தது நிஜம்.. காதலியைத் தெரிந்த எனக்கு காதலிக்கத் தெரியவில்லை..

(இந்தியா காதல் பூமிதான்.. காதலர் பூமியல்ல) காதலுக்கு சிறகு மட்டுமெ தெரியும் ஆனால் திருமணத்திற்குத் தான் கால்களும் தெரியும்.. எனக்கு சிறகு தந்த காதலியே என் கால்களின் லாடத்தை யார் அறிவார்? சொல்கிறேன்..
" என் தாயைவிட சாய்ந்த நாற்காலியை அதிகம் நேசிக்கும் என் தந்தை "
" சீதணம் கொண்டுவந்த பழைய பாய் போல் கிழிந்த என் தாய் "
" தான் பூப்பெய்த செய்திகூட புரியாத என் தங்கை "
" கிளிந்த பாயில் படுத்துக் கொண்டு கிளியோபாட்ராவை நினைத்து ஏங்கும் என் அண்ணன் "
" கறுப்பு-வெள்ளை தொலைகாட்சியில் கலர் கனவு காணும் என் தம்பி "
இத்தனை பேருக்கும் மாதா மாதம் பிராணவாயு வழங்கும் நான் கால்களில் லாடங்களோடு எப்படி உன்னுடன்
ஓடி வருவேன்.. என்னை மன்னித்து விடு.. என்னை மன்னித்து விடு.. 
ஐரோப்பாவில் கல்யாணத் தோல்விகள் அதிகம்.. இந்தியாவில் காதல் தோல்விகள் அதிகம்.. இந்தியா காதலின் பூமிதான்.. காதலர் பூமியல்ல...

1 comments:

Anbu said...

" உன்னை காதலிக்கிறேன் என்பது தமிழ்த்தாய்வாழ்த்தாகவும்..
என்னை மறந்துவிடு என்பது தேசியகீதமாகவும் ஒளிக்கிறது..

நல்லா இருக்குடா இந்த வரி...

Post a Comment

My

pitichiruku