..குருதிக்கூடு..

..என்னவளுக்காக..

Monday, 19 March 2012

ஆசை


எனது பெயரைத் தெரிந்து கொள்ள
ஞாபகம் ஆசைப்படுகிறது
ஒரு கடிதம் எழுதேன்....

Sunday, 18 March 2012

இளைய பாரதி


விழி பின்னி
விரல் பின்னி
விம்மிடும் இதயம் பின்னி
இதழ் பின்னி
இடை பின்னி
சுவாசம் பின்னி....
பின்னிப்பின்னி பிரியவோ
பிரியம்...

பட்டாம்பூச்சி


எந்தப் பூவுக்குள்
தவமிருந்தால்
பட்டாம்பூச்சியாய்
பிறக்க முடியும்..!?

ECG


கண்கள் என்பது,
காதலர்களுக்குள் வெறுமனே
தகவல் பரிமாறிக்கொள்ளும்
பேஜர் மட்டுமல்ல...
ஒருவர் இதயத்துடிப்பை இன்னொருவருக்கு
தெரியப்படுத்தும் E.C.G-யும் கூட....

ஆதாம்-ஏவாள்


ஆதாமின் முத்தம்
ஏவாளின் எந்த பாகத்திற்கு
முதலில் கிடைத்திருக்கும்...!?

My

pitichiruku