..குருதிக்கூடு..

..என்னவளுக்காக..

Friday 2 September 2011

..பூலோக தேவதை..



      அருமையான பூங்கா.. ஒரு இளைஞன் வருகிறான்-அங்கே மெல்லிய   இடை கொண்ட பூங்கொடி ஒருத்தி நிற்கிறாள். பயலுக்கு உடம்பு துடிக்கிறது. உள்ளம் தந்தியடிகிறது... யார் இவள்? தேவலோகத்து ஊர்வசியா?    தனம் பற்றி தவிக்க வைக்கும்  ரம்பையோ?   பூமியிலே  இதுபோன்று  ஒரு அழகியா? என்று அதிசயிக்கிறான். சரி அவள் பூலோகமா? தேவலோகமா என்று ஒரு முடிவெடுக்க வேண்டுமல்லவா? ஆதலால் அவள் பாதம் பார்க்கிறான்.. பூமி அவள் பாதத்திற்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆகா..! இவள் பூலோக பிரஜை தான்.. ஏனென்றால் தன் வீட்டுக் கிழவி சொன்ன கதைகளில் தேவலோகக் குமரிகள் வானில் மிதப்பார்கள் - பறப்பார்கள் என்று தான்.. 

இவளின் பாதமோ பூமியில்.. ஆகவே இவள் மானிடப்பிறவி தான் என்ற முடிவிற்கு வருகிறான்.
     அவள் அருகே செல்கிறான்-அவள் அழகில் கண் சிமிட்ட மறக்கிறான்-அன்பே என்கிறான்-சற்றே தடுமாற்றத்தோடு நான் உன்னை காதலிக்கிறேன் என்கிறான்-மெளனம் காக்கிறாள்-நீ சம்மதம் மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன் என்கிறான்-அவளோ நாள் பட்ட நோய் போல் பதில் கூறாமல் போகிறாள்.. அன்று மாலையில் காதல் ஏக்கத்தோடு அலுத்துத் தூங்குகிறான். காதல் விடுமா? கனவிலும் வருகிறாள் அந்த காரிகை.. காதலும் தருகிறாள்.. இனியும் தம்மால் பொருக்க முடியாதென்று எழுந்து அமர்கிறான். பூங்காவில் சந்தித்த அந்த மோகனக்குமாரியின் அழகை எண்ணி எண்ணி புலம்ப ஆரம்பிக்கிறான். இரவில் அவன் புலம்பியதை அம்பாக திரித்து காலையில் அவள் விழியில் செலுத்த எண்ணி படுக்கலானான்.
     மறுநாள் காலை அவளைப் பார்க்கிறான். சாதாரணக் காதலர்கள் பார்க்கும் பொழுது என்ன நடக்கும்? உணர்ச்சிகள் மீதூறும்-உடல் சூடேறும் இதுதானே நடக்கும். ஆனால் இவனுக்கோ மெய்தளர்ந்து விட்டது.
   ஏ பெண்ணே.. நீ எப்படி இருக்கிறாய் தெரியுமா?
.. கட்டாத பூமாலை ..
.. கற்பக பூ மாலையில் வாசம் தரும் வண்டு ..
.. வேந்தர்களிடம் இல்லாத செல்வம் ..
.. மேகம் சேராத மின்னல் ..
.. தெவிட்டாத தேன் ..
.. தாகம் தணிக்கும் தனி மருந்து ..
வட்டமுகக் கட்டழகுப் பெட்டகமே.. வாயேன் இப்பக்கம்.. தாயேன் ஒரு முத்தம்.. ஜோடி காதலர்கள் நாமே.. வா ஆடி மகிழ்வோம் மானே..
     பேராசை என்னும் ஆழ்கடலில் விழுந்துவிட்டேன் உனது தோள் என்னும் கப்பலில் ஏற்றிக் கரை சேர்க்க மாட்டயா? - என்று அவளை அணு அணுவாகப் பிளந்துகட்டுகிறான்- மெளனம் கலைத்தால்.. வெட்க்கத்துடன் தலைகுனிந்து ஏரிக்கொள்ளுங்கள் நாம் யாருமில்லா தனித் தீவில் குடிபுகுவோமென்று...

8 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

எழுத்துக்களால் தேவதையைக் காட்சிப்படுத்திவிட்டீர்கள்..

முனைவர் இரா.குணசீலன் said...

என்னைக் கேட்டால் திருமணத்துக்கு முன்னர் ஒரு பெண் கனவிலோ நினைவிலோ அழகாகத் தெரிவது..

உடலில் தோன்றும் வேதியியல் மாற்றம்!

ஆனால்

திருமணத்துக்குப் பின்னும்
குழந்தை பிறந்த பின்னும் ஒரு பெண் அழகாகத் தெரிகிறாள் என்றால்

அதுதான் உண்மையான காதல் என்பேன்..

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கள் வலைப்பதிவை அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி நண்பா..

இனி அடிக்கடி வருவேன்.

..சபரி.. said...

..என் குருதி கூட்டில் குடியேறியமைக்கு நன்றி தோழா..

N.H. Narasimma Prasad said...

சூப்பர். நீங்க வர்ணித்த மாதிரி ஒரு பெண் கிடைத்தால் யாராக இருந்தாலும் அவன் கவிஞன் ஆவான்.

..சபரி.. said...

..என் குருதி கூட்டில் குடியேறியமைக்கு நன்றி பிரசாத்.. அடிக்கடி வாருங்கள் , உற்சாகம் தாருங்கள்..
கவிஞன் ஆக்குவது மட்டுமல்ல.. பைத்தியம் ஆக்கும் பேரழகும் பெண்களுக்கு மட்டுமே சாத்தியம் ஆகிறது...

அம்பாளடியாள் said...

அருமையான படைப்பு வாழ்த்துக்கள் சகோ .......

..சபரி.. said...

..என் குருதி கூட்டில் குடியேறியமைக்கு நன்றி அம்பாளடியாள்..

Post a Comment

My

pitichiruku